Wednesday 25 May 2016

விரைவு தபால் சேவைக்காக தமிழகத்திற்கு 4 விருதுகள் மத்திய மந்திரி வழங்கினார்


சென்னை, மே.24-
தபால் துறையை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கான விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் சென்னையை மையமாக வைத்து செயல்படும் மெட்ரோ பிரிவில் சென்னை 2-வது பரிசும், சென்னையை தவிர்த்து புறநகர் பகுதிக்கு முதல் பரிசுக்கான விருதுகள் கிடைத்துள்ளது.
இதுதவிர சிறிய பகுதியாக பிரிக்கப்பட்டுள்ள நெல்லைக்கு முதல் பரிசும், நடுத்தர பகுதியாக பிரிக்கப்பட்டுள்ள மதுரைக்கு முதல் பரிசுக்கான விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் தமிழகத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன. விருது மற்றும் சான்றிதழ்களை, மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்திடம் இருந்து தமிழக தபால் துறை தலைவர் சார்லஸ் லோபோ மற்றும் சென்னை வட்ட தபால் துறை தலைவர் மெர்வீன் அலெக்சாண்டர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சென்னை வட்டத்தில் உள்ள 127 தபால் அலுவலகங்கள் மூலம் 1,450 ஊழியர்கள் மூலம் 40 ஆயிரம் விரைவு தபால்கள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment: