Friday, 2 August 2019

Region transfer under Rule-38



சிறப்புச் செய்தி.


2019 - ஜூன் , ஜூலை ஆகிய மாதங்களில் தபால் துறையில் ஒய்வு பெற்ற SC/ST/OBC ஊழியர்களின் Community verification ஐ காரணம் காட்டி , ஓய்வு பெறும் மாதத்தில் verification அனுப்பி , verification முடிந்தால்தான்  Pension உள்ளிட்ட commutation , DCRG தர முடியும் என்று கூறி Audit -லிருந்து வந்த உத்தரவை சுட்டிக் காட்டி , இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடைமுறையில்லாததை , தமிழகத்தில் மட்டும் புகுத்தி SC/ST/OBC ஊழியர்களின் ஒய்வு benefit ஐ நிறுத்தி வைத்து ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது நிர்வாகம்.

இதனை எதிர்த்து , நமது FNPO R/3 மாநிலச் சங்கம் , தமிழக CPMG  அவர்களுக்கு  உடனடியாக 25.7.2019 அன்று , கடிதம் கொடுத்து விவாதிக்கப்பட்டது.
நம்  மாநிலச் சங்கத்தின் கடிதத்தினை தொடர்ந்து , NUR 'C' அகில இந்திய தலைவர் N.K.தியாகி , அவர்கள் அகில இந்திய மட்டத்தில் 29.7.19 அன்று  கடிதம் கொடுத்தார்.
FNPO சம்மேளன பொதுச் செயலர் திரு.T.N. ரகாத்தே . அவர்களும் 
Minister of Communication  மாண்புமிகு Sanjay Dhotre ., அவர்களை Akola -வில் சந்தித்து ,இது சம்பந்தமாக பேசியுள்ளார். 
ஏனைய தொழிற்சங்கங்கள் , SC/ST நலச் சங்கங்களின் சார்பிலும்  இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இதன் விளைவாக , 1.8.2019 அன்று , அகில இந்திய நிர்வாகத்தின் சார்பில்  உடனடியாக தமிழக CPMG அவர்களுக்கு  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் , இலாகாவில் ஒய்வு பெற்ற / பெற இருக்கின்ற SC/ST/OBC ஊழியர்களின் verification என்பது வேறு. 
Verification ஐ காரணம் காட்டி , எந்த ஒரு Pension உள்ளிட்ட எந்த ஒரு benefit ஐயும் நிறுத்தக் கூடாது என்று 
தமிழக CPMG அவர்களிடமிருந்து உத்தரவு வெளியாகி உள்ளது என்பதை
மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ் உத்தரவு வெளி வர பாடுபட்ட அனைவருக்கும் நன்றி ! நன்றி !

பொன் .குமார் .,
மாநிலச் செயலர்,
NUR 'C'.