ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி விகிதம் சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது 8.75 சதவீதமாக இருக்கும் வட்டி விகிதம் 0.05 சதவீதம்
உயர்ந்தப்பட்டு 8.80 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகவலை
மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
கடந்த இரு நிதி ஆண்டுகளாக 8.75 சதவீதமாக வட்டி வழங்கப்பட்டு வருகிறது. வட்டி உயர்த்தப்பட்டதன் மூலம் 5 கோடி சந்தாதாரர்கள் பயனடைவார்கள்.
நடப்பு நிதி ஆண்டில் பிஎப் அமைப்புக்கு 34,844 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 9 சதவீத வட்டி கொடுத்தால் கூட உபரியாக 100 கோடி ரூபாய் பிஎப் அமைப்பிடம் இருக்கும்.
ஆனால் தொழிற்சங்கங்களிடையே இந்த சிறிய உயர்வு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. இபிஎப்ஓ-வின் நிதி மற்றும் முதலீட்டுக் குழு முன்னதாக 8.95% வட்டி விகித உயர்வை பரிந்துரை செய்திருந்தது. ஆனால் தற்போது 8.80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதே அதிருப்திக்குக் காரணம்.
Source: The Hindu Tamil

0 comments:
Post a Comment