Monday 14 November 2016

வங்கிகளில் பணம் எடுக்கும் உச்சவரம்பு உயர்வு: நிதியமைச்சகம்

புதுடில்லி:வங்கிகளில் பணம் எடுக்கும் உச்சவரம்பை உயர்த்தி மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. 

அதன்படி, நாள் ஒன்றுக்கு வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றும் உச்சவரம்பு ரூ.4000 த்திலிருந்து ரூ.4,500 வரைக்கும், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கும் உச்சவரம்பு ரூ.2000த்திலிருந்து ரூ.2,500 வரையும் எடுக்கலாம் எனவும். மேலும் ஒரு வாரத்திற்கு ரூ.20,000 வரை எடுக்கலாம் என்றிருந்த உச்சவரம்பு ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வங்கிக்கணக்கிலிருந்து காசோலை மூலம் ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடுமுழுவதும் நவ.10 முதல் 13ம் தேதி வரையிலான நான்குநாட்களில் 3 லட்சம் கோடிமதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் டொபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் 50 ஆயிரம் கோடி ரூபாய் பணம் ஏ.டி.எம்., வங்கிகள் மூலம் பெற்றுள்ளனர். ரிசர்வ் வங்கி, வங்கிகள், தபால் நிலையங்கள் தொடர்ந்து ஒன்றினணந்து செயல்பட்டு வருகின்றன. முக்கிய மருத்துவமனைகளில் நடமாடும் வங்கி அமைத்து பணபரித்தனை செய்யவும் ஏற்பாடு செய்யுமாறு நிதியமசை்சகம் அறிவுறுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment