குறைந்தபட்ச தொகை ரூ.50; கட்டணமில்லா பரிவர்த்தனை
வங்கிகளில் 4 முறைக்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் சேவை வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்ச வைப்புத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அஞ்சலக சேமிப்புக் கணக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதை தனியார் வங்கிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தொடங்கியுள்ளன. இதன் விளை வாக புதிய தலைமுறை தனியார் வங்கிகளான எச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் மாதம் ஒன்றுக்கு 4 முறைக்கு மேல் செய்யப்படும் ரொக்கப் பணப் பரிவர்த்தனைக்கு ஒவ்வொரு முறையும் ரூ.150 கட்டணம் விதித்து அதை உடனடியாக நடை முறைப்படுத்தவும் செய்துவிட்டன.
இந்நிலையில், பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ஒருபடி மேலே போய் 3 முறைக்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். அத்துடன், பெரு நகரங்களில் கணக்கு வைத்திருப் பவர்கள் குறைந்தபட்சம் ரூ.5,000, நகர்ப்புறங்களில் கணக்கு வைத் திருப்பவர்கள் ரூ.3,000, சிறு நகரங் களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.1,000 குறைந்தபட்ச தொகையாக வைத்திருக்க வேண்டும்.
இல்லையெனில், எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ அந்தத் தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும். இதன்படி, குறைந்தபட்ச தொகையில் 75 சதவீதம் பற்றாக்குறை இருந்தால் ரூ.100 செலுத்த வேண்டும். 50 சதவீதம் பற்றாக்குறை இருந்தால் ரூ.75-ம், 50 சதவீதத்துக்கு கீழ் இருந்தால் ரூ.50-ம் செலுத்த வேண்டும். இவற்றுடன் சேவை வரியும் செலுத்த வேண்டும்.
கிராமப் புறங்களில் உள்ள வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லையெனில் ரூ.20 முதல் ரூ.50 வரை அபராதம் மற்றும் சேவை வரி செலுத்த வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித் துள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளதாக இவ்வங்கி தெரிவித் துள்ளது. இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
ஆனால், அஞ்சலக சேமிப்பு கணக்கு குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடம் இல்லாமல் உள்ளது. அஞ்சலக சேமிப்புத் திட்டத்தில் எத்தனை முறை வேண்டு மானாலும் கட்டணமில்லாமல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள லாம். மேலும், சேமிப்புக் கணக் கில் குறைந்தபட்சம் ரூ.50 இருந்தால் போதும்.
இதுகுறித்து, தலைமை அஞ்சல்துறை தலைவர் எம்.சம்பத் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
வங்கிகளில் தற்போது 4 முறைக்கு மேல் பரிவர்த்தனை மேற்கொண்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கை யாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே அவர்கள் இப்பிரச்சினையில் இருந்து விடுபட அஞ்சல் நிலையங்களில் சேமிப்புக் கணக்குத் தொடங்க லாம். இந்த சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.50 இருந்தால் போதும். அதேபோல், அஞ்சலகங் களில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி ஏடிஎம் கார்டு பெற்று அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் எத்தனை முறை வேண்டுமானா லும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். அஞ்சல் நிலையங் களில் சேமிப்புக் கணக்குத் தொடங்குவது மிகவும் எளிது. சேமிப்புக் கணக்குத் தொடங்க புகைப்படம் மற்றும் முகவரி சான்றை அளித்தால் போதுமானது.
தமிழகம் முழுவதும் 2,612 அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இதில், தலைமை அஞ்சல் நிலை யங்கள் 94-ம், துணை அஞ்சல் நிலையங்கள் கிராமப் பகுதியில் 1,312-ம், நகர்ப்புற பகுதியில் 1,206-ம் என மொத்தம் 2,518 உள்ளன. இதைத் தவிர பகுதிநேர மாக செயல்படக் கூடிய கிளை அஞ்சல் நிலையங்கள் கிராமப்புற பகுதியில் 8,947-ம், நகர்ப்புற பகுதியில் 331-ம் உள்ளன.
இதைத் தவிர, நாடு முழுவதும் 2,513 அஞ்சல் நிலையங்களில் ‘கோர் பேங்கிங்’ வசதி உள்ளது. தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலைய ஏடிஎம்கள் 97 உள்ளன. எனவே பொதுமக்கள் அஞ்சலகங் களில் சேமிப்புக் கணக்குத் தொடங்கி எவ்வித கட்டணமும் இன்றி தங்களது பணப்பரிவர்த் தனையை எத்தனை முறை வேண்டு மானாலும் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு சம்பத் கூறினார்.
Source:http://tamil.thehindu.com
0 comments:
Post a Comment