Tuesday, 12 September 2017

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு

செப்டம்பர் 12, 2017, 05:24 PM
புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக ஒரு சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.  

விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  ஜூலை 1 ஆம் தேதி முன் தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம், 50 லட்சம் அரசு ஊழியர்கள்  61 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


0 comments:

Post a Comment