Saturday, 19 December 2015

நாடு முழுவதும் 1.25 லட்சம் தபால் நிலையங்களில் ஏ.டி.எம்.: மத்திய அரசு தகவல்.

நாடு முழுவதிலும் வங்கிகளை எளிதில் அணுக முடியாத கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் அவசரத்திற்கு பணம் எடுக்க மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களின் சிரமத்தைப் போக்கி பணம் எடுக்க ஏதுவாக 1.25 லட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்களில் .டி.எம். மற்றும் மைக்ரோ .டி.எம். எந்திரங்களை நிறுவும் பணி நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் இன்று தொலைதூர பகுதிகளில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சில உறுப்பினர்கள் பேசியதற்கு பதிலளிக்கையில் நிதித்துறை இணை மந்திரி ஜெயந்த் சின்கா இதனை தெரிவித்தார். வங்கி மித்ரா இதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயந்த் சின்கா, காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார். 38 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Source:Maalaimalar

0 comments:

Post a Comment