சென்று வா !
நான்
தலைவனென்ற
முதல்வன்
நீ ;
ஒரேயொருவனும்
நீ !
என் பாதை
சரிந்த போதும்
சரியான போதும்
என் மீதான
உன் பார்வை
மாறியதேயில்லை !
உடன்பாடில்லா
வேலை
நிறுத்தங்களிலும்
ஈடுபட்டது
உன்னொருவனுக்காகவே
!
கோபமானவனென
கேள்விப்பட்டிருக்கிறேன்;
வேகமான
மாநிலச்
செயலராய் ,
விவேகமான
மாபொதுச்செயலராய்தான்
பார்த்திருக்கிறேன்
...
FNPO-
வை ..
கே.ஆர் .,
உருவாக்கினார் .
ஜே.கே.பி.,
மும்முனை
பாதையாக்கினார்.
நீயோ
தங்க நாற்கரச்
சாலையாக்கியிருக்கிறாய் ..!
நீயிடுபட்ட
போராட்டக்களம்
பெரிதெனினும்
மிகச் சிறந்தது
ஆறாம்
ஊதியக்குழுவே !
அவ்வளவு
வாங்கியதால்தான்
இவ்வளவுதானா ?
என
இப்போது
கேட்கிறார்கள் .
வீண் போராட்டமென
சலிப்படைகையில்
சும்மா
கிடைப்பதல்ல
உரிமைகளென
சுட்டெரிப்பவன்
நீ !
உனக்கென
குரலுயர்த்திப்
பார்த்ததேயில்லை
;
சங்கத்திற்காக
போராடாது
பார்க்காதிருந்ததில்லை.
அடுத்த தலைமுறை
தொழிற்சங்கவாதிகளுக்கு
நீயோர்
இலக்கணம்.
உனக்கு
பல
பக்தர்களிருக்கலாம் ;
நானோ
தூரத்திலிருந்து
ரசிக்கும்
ரசிகன் !
வேகத்தின்
உச்சம்
நீ ;
பொறுமையின்
உச்சமோ
நாச்சம்மை.
இல்லத்தில்
நாச்சம்மையெனும்
நாதமில்லாவிடின்
நீ
சங்க நாதம்
செய்திருக்க
முடியாது.
பணியில்
காதலிப்பது பெரிது .
காதலியை ,கரம் பிடிப்பதும்
இனியது.
மனைவியோடே
பணி ஒய்வு
பெறுவதோ
மிக மிக மிக ...அரியது.
அப்பேறு
பெற்றவனே ...
போர்க்களங்கள்
போதுமுனக்கு ...
சென்று வா ..
நினைவில்
நின்று
வாழ்வாய் !
S
. பிரசன்னா ,
SA
-2 ,
Ch.
PSO /1 , Ch.8 .
0 comments:
Post a Comment