Thursday, 30 June 2022

APSO சென்னை செயற்குழு கூட்டம் மற்றும் கோட்ட செயலாளர் திரு C. ஏழுமலை அவர்களின் பணி ஓய்வு பாராட்டு விழா

 தோழர்களே!

தோழியர்களே!


 29.06.22 அன்று APSO கோட்ட செயலாளர் திரு C. ஏழுமலை, LSG SUPERVISOR, LM/2 , C.G.பாலாஜி  ரங்கநாதன், SA,LM/2  அவர்களுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா மற்றும் கோட்ட செயற்குழு கூட்டம் திரு.  L. சம்பத்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


செயற்குழுவில்:


தலைவர் :  திரு. L. S

செயலாளர் :திரு. S. சையத் அலி

பொருளார் : திரு.S. ராகவேந்திரன் 

 

மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

பாராட்டு விழாவில் :

நமது முன்னாள் மாநில செயலர் திரு P. குமார் அவர்கள், மாநில செயலர் திரு R. முரளி அவர்கள், அகில இந்திய துணை பொது செயலாளர் திரு. பாலகிருஷ்ணா , மாநில பொருளாளர் திரு.  R.  ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் திரு T.S. சங்கர் பாபு அவர்கள், மாநில உதவி செயலர் திரு K. ஹேமந்த குமார் அவர்கள், சென்னை கோட்ட துணை தலைவர்கள் திரு T.J. ஹரிகிருஷ்ணன், திரு P.ராஜசேகர் அவர்கள், சென்னை கோட்ட உதவி செயலர்கள் திரு M. கணேஷ் குமார், திரு. M. யேசுபாதம் அவர்கள் மற்றும் கோட்ட செயலாளர் திரு. செ. கௌதம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .




















Sunday, 26 June 2022

RMS M கோட்டத்தின் 36வது கோட்ட மாநாடு

 RMS M கோட்டத்தின் 36வது கோட்ட மாநாடு 

26.06.22 இன்று RMS 'M' கோட்டத்தின் 36வது கோட்ட மாநாடு  பூங்கா நகர் அஞ்சல் பிரிப்பகத்தில் நடந்தது. 


கோட்ட தலைவர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் முன்னாள் மாநில செயலர் திரு P.குமார் அவர்கள், FNPO R4 சங்கத்தின் முன்னாள் பொது செயலாளர் திரு. நூர் முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.


மாநில செயலாளர் R. முரளி கலந்து கொண்டு    கோட்ட சங்கம் செயல்பாடுகள் குறித்து பேசினார்  மற்றும் Deputy General Secretary R.பாலகிருஷ்ணா ,மாநில உதவி செயலர் திரு K. ஹேமந்த குமார் ,  கோட்ட செயலாளர்  சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்டம் S. கௌதம் மற்றும் சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட தலைவர்  M. கணேசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.


கோட்ட மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் 


தலைவர் : R. கார்த்திகேயன் 

செயலாளர் : ப. சிவசங்கர நாராயணன்.

பொருளாளர்: G.சுரேஷ்.

 

புதிதாக 2022-2024  தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.











Tuesday, 21 June 2022

Letter to CPMG regarding restoration of establishment strength of Chennai PSO.


 

Friday, 17 June 2022

Letter to CPMG regarding delay in releasing of LSG supervisor promotion


 

Friday, 3 June 2022

23 வது அகில இந்திய மாநாடு

 23 வது  அகில இந்திய மாநாட்டில் தலைவராக திரு. அசோக் குமார் சிங் அவர்களும், பொது செயலாளராக திரு. N.K. தியாகி அவர்களும் பொருளாளராக திரு. நவீன் அவர்களும் ஒருமனதாக தேர்தெடுக்கபட்டனர்.

தமிழ் மாநிலத்தின் சார்பாக திரு. R. பாலகிருஷ்ணன், APSO சென்னை அவர்கள் துணை  செயலாளராகவும், திரு R. முரளி, சென்னை பிரிப்பக கோட்டம் அவர்கள் உதவி செயலாளராகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  

Federal council உறுப்பினர்களாக 

1. P. ராஜசேகர் சென்னை பிரிப்பக கோட்டம்.

2. சையது அலி, APSO சென்னை.

3. K. கணேஷ்ராம், RMS 'CB' கோட்டம்.


ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.















Monday, 23 May 2022

MA 1 மற்றும் MA 25 செக்சன்கள் மீண்டும் அமல்படுத்த இன்று 23.05.2022 D. O. P உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 நமது மாநில சங்கத்தின் சார்பாக கடந்த 30.7.21 கடிதம் கொடுக்கப்பட்டு,  கடந்த மார்ச் மாதம் 24.03.2022 அன்று four-monthly meetingல்  நமது தமிழக CPMG அவர்களிடம் MA 1 மற்றும் MA 25 செக்சன்கள் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று விவாதித்தோம்.


இன்று அதற்கான  - D. O. P உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.








Sunday, 22 May 2022

FNPO R3 மாநில செயற்குழு கூட்டம் (20.05.2022 - 21.05.2022)

Click here to view Report  

கடந்த மே 20, 21 தேதிகளில்,  தஞ்சையில் நமது FNPO R3  மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டம்  திரு V.M. சிவகுமார் , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் 
நமது மாநிலத்தின் அனைத்து கோட்ட செயலாளர்களும் தங்கள் கோட்டங்களில் உள்ள சிக்கல்களை மாநில சங்கத்திடம் தெரிவித்தனர். மாநில சங்கம் அவற்றை விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்தது.

நமது அஞ்சல் துறையில் புதிதாக கொண்டு வரபட்டுள்ள transport policy குறித்தும், one india one parcel குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதன் பிறகு  மாநில செயலர் திரு R. முரளி அவர்கள் மாநில சங்கத்தின் ஓராண்டு செயல்பாடுகளை, தனி அறிக்கையாக  விவரித்தார்.

மேலும் நமது மாநில சங்கத்தின் துணை தலைவர், தஞ்சாவூர் RMS,  திரு R. ராஜா அவர்கள் வரும் 31.5.22 அன்று பணி ஓய்வு பெற இருப்பதால், அவருக்கு நமது மாநில சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் நமது முன்னாள் மாநில செயலாளர் திரு P. குமார் மற்றும் முன்னாள் மாநில தலைவர் திரு. P.கோகிலவானன் மற்றும் முன்னாள் மாநில துணை செயலாளர்,  RMS T கோட்ட செயலாளர் திரு.N.ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

RMS T கோட்ட தலைவர் திரு. குலோத்துங்கன் அவர்கள் வருகின்ற 31.05.2022 அன்று ஒய்வு பெற இருப்பதால், அவர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 

     **R.முரளி**
மாநில செயலர் FNPO R3 தமிழ் மாநிலம்













Tuesday, 17 May 2022