Thursday, 14 January 2016

கிராமங்களில் வங்கி வசதி கிடைக்க அஞ்சலகங்களில் ஏடிஎம் வசதி : பட்ஜெட்டில் நிதி ஒதுக்க திட்டம்





புதுடெல்லி: அஞ்சலகங்களில் ஏடிஎம் அமைப்பதற்கு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நாடு முழுவதும் சிறு கிராமங்களிலும் வங்கிச்சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, அஞ்சலகங்களில் ஏடிஎம் மையங்களுடன் ஒருங்கிணைந்த சேவை வசதி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி நாடு முழுவதும் உள்ள தலைமை அஞ்சலகங்களில் ஏடிஎம் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர கிராமப்பகுதிகளிலும் அஞ்சலகங்களில் ஏடிஎம் அமைப்பதால், கிராம மக்களுக்கு நிதி சேவை எளிதாக கிடைக்கும். தமிழகத்திலுள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, ‘‘கிராம பகுதிகளில் வங்கிச்சேவையை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு அஞ்சலகத்திலும் ஏடிஎம் அல்லது மைக்ரோ ஏடிஎம் அமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்காக இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். மாநில அளவிலான வங்கியாளர் குழு, நாடு முழுவதும் வங்கி வசதி இல்லாத 4,597 கிராம பஞ்சாயத்துக்களை அடையாளம் கண்டுள்ளது.


Source: Dinakaran

0 comments:

Post a Comment