மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி யர்களுக்கான 7-வது ஊதியக்குழு
பரிந்துரைகள் தொடர்பாக முடிவெடுப் பதற்காக அமைச்சரவை செயலாளர் பி.கே.
சின்ஹா தலைமையிலான உயர்நிலைக் குழுவை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்
துள்ளது.
7-வது ஊதியக்குழு தன் பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த பரிந்து ரைகளை பரிசீலிக்க உயர்நிலைக் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவ காரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு
செய்தியாளர்களிடம் நேற்று கூறும் போது, “7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை
களை பரிசீலனை செய்ய, செயலாளர்கள் அளவிலான குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது. 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில்
ஊதியம் நிர்ணயிக்கப்பட்டால், 2016-17ம் நிதியாண்டில் அரசுக்கு ரூ.1.02
லட்சம் கோடி கூடுதலாக செலவாகும்’’ என்றார்.
Source: The Hindu
hope for a speedy and just implementation of reasonable recommendations and hope to expect rectification of unjust scrapping of many allowances and improvement in the HRA + TA Allowances too.
ReplyDeleteit is better to hope for a better future rather than a bitter result. lets hope so ..