Thursday, 4 May 2017

தமிழக கூட்டு போராட்டக் குழு -JCA

NFPE                                                             PJCA                                                                            FNPO
                                                தமிழக கூட்டு போராட்டக் குழு
   

நேற்று 03.5.2017 மாலை 6.45 மணி முதல் இரவு 10.00 மணி வரை தேனாம்பேட்டை BEFI  அலுவலகத்தில் தமிழ் மாநில PJCA (NFPE,FNPO அனைத்து மாநில செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 

PJCA
தலைவர் தோழர் திரு. P. குமார் அவர்கள் தலைமை தாங்கினார். 

தோழர்கள்,திரு J.ராமமூர்த்தி மாநில செயலாளர் P3 NFPE,திரு B.சுகுமாறன் மாநில செயலாளர் P4 FNPO,திரு B.பரந்தாமன் மாநில செயலாளர் R4 NFPE,
திரு S.ஸ்ரீதரன் மாநில செயலாளர் R4 FNPO,திரு R.B.சுரேஷ் மாநில செயலாளர் AUDIT & A.C.
திரு G.அந்தோணி மாநில செயலாளர் CIVIL WING 
திரு D.சிவகுருநாதன் மாநில தலைவர் CASUAL LEBARதிரு P.மோகன் மாநில தலைவர் P3 NFPE,
திரு R.முரளி    FNPO R3 இளைஞர் அணி செயலாளர்


மற்றும் கோட்ட செயலாளர்கள் தங்களது கருத்துக்களையும் பிரச்சனைகளையும் கூறினார்கள்.

இறுதியாக PJCA கன்வீனர் தோழர் G.கண்ணன் அவர்கள் அனைவரின் கருத்துக்களையும் இணைத்து பேசினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.
தமிழகம் தழுவிய பிரச்சனைகளை தொகுத்து மெமோரண்டம் CPMG அவர்களிடம் வழங்குவது, பேச்சுவார்த்தை நடத்துவது. பிரச்சினை தீராத பட்சத்தில்,

2.
நான்கு மண்டலங்களிலும், மண்டல அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது,

3.
மாநில அஞ்சல் அலுவலகம் சென்னையில் முழு நாள் தர்ணா நடத்துவது. 2000  ஊழியர்கள்களை திரட்டுவது,

4.
தர்ணா முடிவில் வேலைநிறுத்த தேதியை முடிவு செய்வது.

போராட்ட தேதிகளை தலைவர் மற்றும் கன்வீனர் அறிவிப்பார்கள்.
மேற்கண்ட முடிவுகளை அனைத்து ஊழியர்களும் சிறப்பாக அமுல்படுத்திட கேட்டுக் கொள்கிறோம். 
                                                                  தோழமையுடன்,
P.
குமார்                                                                                                                               G.கண்ணன் 
தலைவர்                                                                                                                                கன்வீனர் 
PJCA                                                                                                                                           PJCA
                          





1 comment:

  1. ஒன்றுபடுவோம் போராடுவோம் வெற்றி
    பெறுவோம்

    ReplyDelete