7வது சம்பள கமிஷன் சம்பந்தமாக சம்மேளனங்களின் சார்பில் கேபினெட் செகரட்டரி, நிதி அமைச்சர் மற்றும் நமது தபால்துறை அதிகாரிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை நமது கோரிக்கை ஒன்று கூட நிறைவேற்றப்படாமல் இருப்பதுடன் அரசின் முடிவு என்ன என்றே தெரியாத சூழ்நிலையில் அதிகாரிகளிடம் சாதகமான பதில் வந்தாலும் அவை எல்லாம் அமலாக்கப்படாத காரணத்தால் நமது FNPO சம்மேளனம் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்ட அறைகூவலை விடுத்துள்ளது.
1. 27.06.17 அன்று அனைத்து கோட்ட அலுவலகம் முன் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்.
2. 11.07.2017 அன்று (CPMG) மாநில அலுவலகம் முன் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்.
3. 28.07.2017 அன்று டெல்லி (Dak Bhavan ) Directorate அலுவலகம் முன் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்.
4. நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்த தேதி பின்னர் முடிவு செய்து அறிவிக்கப்படும்.
அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து நடைபெறும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தில் FNPO சம்மேளனப் பொதுச் செயலர் தோழர் திரு D.தியாகராஜன் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ளார்.
27.06.2017
காலை 11:00 மணி - சென்னை விமான அஞ்சல் பிரிப்பகம் (Chennai APSO)
பகல் 1:00 மணி - சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட அலுவலகம் (Egmore, Chennai-8)
மாலை 3:00 மணி - சென்னை 'M' கோட்ட அலுவலகம் (DPA Egmore, Chennai-8)
பகல் 1:00 மணி - சென்னை அஞ்சல் பிரிப்பக கோட்ட அலுவலகம் (Egmore, Chennai-8)
மாலை 3:00 மணி - சென்னை 'M' கோட்ட அலுவலகம் (DPA Egmore, Chennai-8)
ஒன்றுபடுவோம்! போராடுவோம் ! வெற்றிபெறுவோம்!
என்றும் அன்புடன்,
பொ.குமார்
மாநிலச் செயலர்
FNPO R3
என்றும் அன்புடன்,
பொ.குமார்
மாநிலச் செயலர்
FNPO R3
💯💆
ReplyDelete