நாள்:19.06.2017 இடம்: CPMG அலுவலகம்
தமிழக PJCA (FNPO & NFPE) சார்பில் CPMG அவர்களுக்கு 17.05.2017 அன்று 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி Memorandum கொடுக்கப்பட்டது. கோரிக்கைகளை செவிசாய்க்காமல் மாநிலச் செயலர்களை அழைத்துப் பேசாத மாநில நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டிக்கும் வகையில் 03.06.2017 அன்று NFPE & FNPO அனைத்து மாநில செயலர்களும் கூடி 07.06.2017 புதன்கிழமை மாலை 5 மணியளவில் CPMG அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 07.06.2017 அன்று நடைபெற்ற போராட்டத்தில் 350 பேர்களுக்கு மேல் கலந்து கொண்டு 5 மணி முதல் 7 மணி வரை முழு வீச்சுடன் போராட்டம் நடைபெற பாடுபட்ட அனைத்து மாநில, கோட்ட, கிளை சங்க நிர்வாகிகளுக்கு மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்.
இதுவரையில் மாநில நிர்வாகம் PJCA தலைவர்களை அழைத்து பேசாத காரனத்தால் PJCA சார்பாக வருகிற 19.06.2017 திங்கள் அன்று ஒரு நாள் முழு நேர மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் CPMG அலுவலகத்தில் நடைபெறும். அனைத்து கோட்ட சங்கங்களும் கலந்து கொண்டு தர்ணா போராட்டத்தை வெற்றி பெறச் செய்து கோரிக்கைகளை வென்றெடுக்க

ஒன்றுபடுவோம்! போராடுவோம் ! வெற்றிபெறுவோம்!
என்றும் அன்புடன்,
பொ.குமார்
மாநிலச் செயலர்
FNPO R3
என்றும் அன்புடன்,
பொ.குமார்
மாநிலச் செயலர்
FNPO R3
0 comments:
Post a Comment