Saturday, 15 October 2016

தபால் வங்கியில் 1725 அதிகாரி பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

தபால் வங்கியில் 1725 அதிகாரி பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தபால்துறையானது வங்கிப் பணிகள் சேவையையும் வழங்குகிறது. இதையடுத்து தபால் அலுவகங்கள் வழியே வங்கிச் சேவையை எளிமைப்படுத்தும் வகையில் ‘இந்திய அஞ்சல் வழங்கீட்டு வங்கி’ (ஐ.பி.பி.பி.) எனும் பொதுத்துறை நிறுவனம் மத்திய அரசால் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆகஸ்டு 17-ந் தேதி, மத்திய கம்பெனிகள் விவகாரத்துறையின் கீழ் பதிவு செய்து அங்கீகாரம் பெற்றுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 1.39 லட்சம் கிராமப்புற அஞ்சலகங்கள் உள்பட மொத்தமுள்ள 1.54 லட்சம் அஞ்சலகங்களே இந்த தபால் வங்கியின் அணுகும் இடங்களாக விளங்கும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் ஏராளமான பணியிடங்களும் உருவாகிய வண்ணம் உள்ளது. ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு பிரிவுகளுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் 1725 அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெவ்வேறு அறிவிப்புகளின்படி ஸ்கேல் 2,3 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 1060 இடங்களும், ஸ்கேல்-1 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 650 இடங்களும், தலைமை தொழில்நுட்ப அலுவலர், தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரி பணிக்கு 15 இடங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

துணை பொது மேலாளர், முதுநிலை மேலாளர், தலைமை தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட 15 பணியிடங்களுக்கு குறிப்பிட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பும், பணி அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் முழுமையாக பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 19-10-2016-ந் தேதியாகும்.

650 உதவி மேலாளர் பணிகள்:

பிராந்திய அலுவலகங்களில் உதவி மேலாளர் (ஸ்கேல்-1) பணிகளுக்கு 650 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு 1-9-2016 தேதியில் 20 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-9-1986 மற்றும் 1-9-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 25-10-2016-ந் தேதியாகும்.

1060 அதிகாரி பணிகள்

இதேபோல ஸ்கேல்-2, ஸ்கேல்-3 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 1060 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் சீனியர் மேனேஜர், மேனேஜர் பணிகள் உள்ளன. பிரிவு வாரியான பணியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.

சீனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு 26 முதல் 35 வயதுடையவர்களும், மேனேஜர் பணிக்கு 23 முதல் 35 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். 1-9-2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் எம்.பி.ஏ., ஐ.சி.ஏ.ஐ./சி.ஏ. போன்ற முதுநிலை படிப்புகளை படித்தவர் களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150-ம், மற்றவர்கள் ரூ.700-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக 1-11-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை பற்றிய விரிவான விவரங்களை அறிய விரும்புபவர்கள் www.indiapost.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

visit us : www.thirdeyeinstitute.in

0 comments:

Post a Comment