Tuesday, 20 September 2016

RMS 'T' கோட்டத்தின் முப்பெரும் விழா


RMS T கோட்டத்தின் 28 வது கோட்ட, கிளை மாநாடு மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா.

இடம்: திருச்சி HRO RC   
தேதி : 18.09.16

திரு.R. ராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கோட்ட மாநாடில் முன்னால்  R3 மாநிலத் தலைவர் திரு. A.அப்துல் கரீம்,   R4 மாநிலத் தலைவர் திரு.நாராயணசாமி, சென்னை வடக்குக் கோட்ட முதுநிலை கண்காணிப்பளர் திரு.K. ரவீந்திரன்,  மாநில செயலர் திரு.P. குமார் , இளைஞர் அணி செயலர் திரு.  R. முரளி, சென்னை அஞ்சல் பிரிப்பகக்  கோட்ட அமைப்பு செயலர்          
திரு.P. ராஜா மற்றும் கோட்ட நிர்வாகிகள், கிளைச் செயலர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக தேசியக் கொடியை திரு. A.  அப்துல் கரீம் அவர்களும், சம்மேளனக் கொடியை திரு.P.  குமார் அவர்களும் ஏற்றினார்கள். 

மறைந்த முன்னால் மாநில துணைத் தலைவர்
K. விஸ்வநாதன் அவர்களின் நினைவு கல்வெட்டினை சென்னை வடக்குக் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திரு. K. ரவீந்திரன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

மாநிலச் சங்கத்தின் சார்பில் இதுவரை சிறப்பாக செயல்பட்ட கோட்ட, கிளை நிர்வாகிகளுக்கும் புதியதாகத்  தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கும் நல்வாழ்துக்கள்.


































0 comments:

Post a Comment