Tuesday, 17 January 2017

ATM-ல் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ10000 உயர்வு


ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.  இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
இனி தினசரி ஏடிஎம்களில் ரூ.10 ஆயிரம்  வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  
அதே போல் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வாரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றிருந்த உச்ச வரம்பு ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சேமிப்பு வங்கி கணக்குள்ளோர் ஏ.டி.எம் ல் வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment